சனவரி மாதம் 25ஆம் நாள் - தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - செய்தி வெளியீடு எண்:166 நாள் : 24.01.2023 - Kalviseithi
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 24, 2023

சனவரி மாதம் 25ஆம் நாள் - தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - செய்தி வெளியீடு எண்:166 நாள் : 24.01.2023



25th January - National Voter's Day Awareness - Press Release No:166 Date : 24.01.2023 செய்தி வெளியீடு எண்:166

நாள் : 24.01.2023

வாக்காளர் அனைவருக்கும் வணக்கம்.

ராஜீவ் குமார்

2011ஆம் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான சனவரி மாதம் 25ஆம் நாள், ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு வாக்காளர்களாக அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 1950ஆம் ஆண்டு சனவரி மாதம் 25ஆம் நாளான முதல் குடியரசு தினத்தையொட்டி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையத்தின் செயல்பாடு மற்றும் முடிவெடுப்பதில் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக 324ஆம் பிரிவின் கீழ் அரசியலமைப்பு அங்கீகாரத்தை அரசியல் நிர்ணய சபை வழங்கியது. குறைந்த கல்வியறிவு மற்றும் வாக்காளர் பட்டியல் இல்லாத காலத்தில், வயதுவந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், தேர்தல் நடத்துவதற்கு நிரந்தர, மற்றும் தன்னாட்சி ஆணையத்தை நிறுவியது, அரசியல் நிர்ணய சபையின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த ஒரு நற்சான்றாகும்.

அமைப்பின் திறன், நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மையானது, 17 மக்களவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றம் துணை குடியரசுத் தலைவர் பதவி ஒவ்வொன்றிற்குமான 16 தேர்தல்கள், இன்று வரையிலான 399 சட்டமன்றப் பேரவை தேர்தல்களில் நிலைநாட்டப்பட்டுள்ளது. 400வது சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

எப்போதாவது நிகழ்கிற பன்னாட்டு அனுபவங்களுக்கு மாறாக, தேர்தல் முடிவுகள் இந்தியாவில் ஒருபோதும் சர்ச்சைக்குள்ளானதில்லை.

தேர்தல் தொடர்பான தனிநபர் மனுக்களுக்கு உரிய உயர்நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய குடிமக்களின் நம்பிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. அந்நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்ப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

வாக்காளர்கள், 47,500 க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களைச் சேர்ப்பதற்கான ஏற்பாட்டு முறையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

மக்களாட்சியில் அவர்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நூறு வயதைக் கடந்த வாக்காளர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் நான் நன்றி தெரிவித்தேன். நவம்பர் 5, 2022 அன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கல்பாவில் மறைந்த ஷியாம் சரண் நேகிக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் (1951), முதல் வாக்காளராக அங்கீகரிக்கப்பட்ட அவர், 106 வயதில் காலமாவதற்கு முன்பு வரை, ஒருபோதும் அவர் வாக்களிக்க தவறியதில்லை. கடமை உணர்வுடன் நாம் நமது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு மறைந்த ஷியாம் சரண் நேகியின் முன்னுதாரண நிகழ்வு நமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

இளம் வாக்காளர்களே இந்திய மக்களாட்சியின் எதிர்காலமாகத் திகழ்கின்றனர். 2000-ஆம் ஆண்டை ஒட்டியும் அதற்குப் பின்னரும் பிறந்த அடுத்த தலைமுறையினர் நமது வாக்காளர் பட்டியலில் இணையத் அவர்கள் தொடங்கியுள்ளனர். வாக்காளர்களாக முழுவதும் இணைந்திருப்பது ஏறத்தாழ இந்த நூற்றாண்டு மக்களாட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

எனவே, மாணவர்கள் வாக்களிக்கும் வயதை அடைவதற்கு முன்பே பள்ளி அளவில் மக்களாட்சிக்கான சிந்தனையை வேரூன்றச் செய்வது மிகவும் இன்றியமையாததாகும். அதே நேரத்தில், இளைஞர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்காக பல்வேறு செயற்பாடுகள் வாயிலாக தேர்தல் நடைமுறைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வாக்களிப்பதில் அக்கறையின்மையை வெளிப்படுத்த முனையும் நகர்ப்புற வாக்காளர்களிடமும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கழிப்பறைகள், மின்சாரம், குடிநீர், சாய்வுதளங்கள் போன்ற உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (AMF) ஏற்படுத்துவதை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துச் தேர்தல் பார்வையாளர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக (100 நிமிடங்களுக்குள்) உரிய நடவடிக்கையை மேற்கொள்ள இது வகை செய்தது.

வாயிலாக, உலகெங்கிலும் நம்பகமான தேர்தல் முடிவுகள் மக்களாட்சியின் மாண்புகளைத் தக்கவைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. உண்மைத் தகவல்களையும் கண்ணோட்டங்களையும்/ தவறான செய்திகளையும் சமூக ஊடகங்களில் பேரளவிலும், மிக விரைவாகவும் பரப்பப்படுவது தேர்தல் மேலாண்மைத் தொழில் நுட்பத்தின் ஏனைய கூறுகளுக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் கட்டமைப்பை நிருவகிக்கும் தார்மீக மற்றும் சட்டக் கூறுகளுக்கு கட்டுப்படாமல், மக்களாட்சிக்கு எதிரான நபர்கள், இத்தொழில்நுட்பத்தை வணிகத்திற்குகந்த பயனுள்ள கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், நூற்றுக்கணக்கான போலி காணொலிப் பதிவுகள் ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அவற்றிற்கான காலவரையறை ஏதுமில்லாத நிலையில், தேர்தல் நிறைவுற்ற பின்பும் குறிப்பாக, முதன்மை தேர்தல் கூறுகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் அமைந்த அத்தகைய பதிவுகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

சமூக ஊடக தளங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு திறன்களை, குறைந்தளவு, இத்தகைய வெளிப்படையான போலி தகவல் பரிமாற்ற முயற்சிகளை தடுக்க பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சுதந்திரமான பேச்சு உள்ளிட்ட பொது வெளிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு இணைந்து பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தேர்தல் நிருவாக அமைப்புகளின் பணிகளை மிகவும் கடினமாக்குகின்ற தவறான தகவல்களைப் பற்றி அறிந்து, சுய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதாகவும், அவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில், வாக்காளர்களுக்கு எளியமுறையிலும் அறம் சார்ந்த வகையிலும் தேர்தல்களை நடத்துவதற்கேற்ப அனைத்து தடைகளையும் நீக்கிடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுள்ள உறுதியை எடுத்தியம்பும் வகையிலும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. 13வது தேசிய வாக்காளர் தினத்தின் (2023) கருப்பொருள் "'வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்பதாகும்.

வாக்காளர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் கருப்பொருள் உள்ளது என்பது தெளிவாகிறது. குடிமக்கள் தங்கள் கடமையின் ஒரு பகுதியாக, வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளும்போது, அதன் நற்பலன் அரசு நிருவாகத்தில் உறுதியாக உணரப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இனிய வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot